110 ஆண்டுகள் பழமையான வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 November 2025

110 ஆண்டுகள் பழமையான வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.


வலங்கைமான் – நவம்பர் 21

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில், கடந்த நூற்றாண்டுக்கும் மேலாக அரசுப் பணிகளில் பயன்பட்டு வந்த 100 ஆண்டுகள் பழமையான வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலைக்குரியதாக உள்ளது.


ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், புள்ளியியல் அலுவலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்த நிலையில், 1914ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம் 110 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முக்கிய அடையாளமாக காட்சியளிக்கிறது.


சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையால் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டாலும், அதன் சில மாதங்களிலேயே வட்டாட்சியர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் இக்கட்டிடம் அரசுப் பயன்படுத்த இல்லாமல் வாடகையாக காலியாகிவிட்டது.


பாம்பு, விஷஜந்துக்கள் வசிப்பிடமாக மாறிய கட்டிடம்

பராமரிப்பு இல்லாமல் காலியாக கிடக்கும் பழமையான கட்டிடம்,

  • பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள்

  • அரச மரக்கன்றுகள் சுவற்றில் வளர்தல்

  • சுவர்களில் விரிசல்

போன்ற ஆபத்தான நிலையுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அவ்வப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் காவல் நிலையம் பகுதியில் ஜந்துக்கள் நுழைவு அதிகரித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்

வலங்கைமானின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக உள்ள இக்கட்டிடத்தை, அதன் தன்மையை குலைக்காமல் புனரமைத்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தினை இக்கட்டடத்தில் இயக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் பரிந்துரைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad